சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து புதிய ஜனநாயகக் கட்சி சாதகமான நிலைப்பாட்டை வெளியிட்டது.
பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (04) சமர்பித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு இரண்டு ஆசனங்கள் தேவையான நிலை உள்ளது.
343 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், Liberal கட்சி 170 ஆசனங்களை கொண்டுள்ளது.
Conservative தலைவர் Pierre Poilievre, Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet ஆகியோர் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் வகையில் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தனது கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பை தவிர்க்க அனுமதிக்கப்படலாம் என இடைக்கால NDP தலைவர் Don Davies கூறினார்.
இதன் மூலம் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதை ஒரு வகையில் புதிய ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் நிலை தோன்றியுள்ளது.
Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை திட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை $78.3 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாக அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் Liberal அரசாங்கம் 170 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.
ஏனைய கட்சிகள் 173 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.
Conservative 142, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என ஆசன பகிர்வு அமைகிறது.
