November 16, 2025
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் பதவி போட்டியில் இன்னுமொருவர்

நாடாளுமன்ற உறுப்பினர் Leslyn Lewis Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார்.

Conservative கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதாக Lewis செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார்.

தலைமைக்கான தனது பிரச்சாரம் நம்பிக்கை, ஒற்றுமை, இரக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என Lewis கூறினார்.

Ontarioவை தளமாகக் கொண்ட வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Lewis 2020ஆம் ஆண்டில்   கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை  Calgaryயில் நிகழ்வொன்றை நடத்தும் முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் தனது எண்ணத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Brampton நகர முதல்வர் Patrick Brownனும் விரைவில் தலைமைக்கான தனது பிரச்சாரத்தை அறிவிப்பார் என அவரது பிரச்சாரக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் Pierre Poilievre மாத்திரம் இதுவரை தலைமை பதவிக்கு போட்டியிடுவதாக  அறிவித்திருந்தார்.
Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Justin Trudeau வெற்றி!

Lankathas Pathmanathan

கட்சி தலைவர்களின் விவாதங்களில் இருந்து பசுமைக் கட்சி நீக்கப்பட்டது  ‘ஜனநாயக விரோதமானது’?

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலகும் Ontarioவின் துணை முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment