தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நன்றி தெரிவித்தார்.

உக்ரைனுக்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமான ஏவுகணை உபகரணங்களை கனடா வழங்கும் என்ற அறிவிப்பை செய்வாய்க்கிழமை (10) கனடிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

இந்த நன்கொடைக்கு உக்ரைன் ஜனாதிபதி, கனடிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

Justin Trudeauவின் ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு ஆதரவான உண்மையான தலைமை மீண்டும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.

கனடாவின் நன்கொடை அழிவுகரமான வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த உதவும் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Liberal அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்: Conservative

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Quebecகில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment