September 9, 2026
தேசியம்
செய்திகள்

World Series 2025: ஆறாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி

World Series 2025 தொடர் இறுதி ஆட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

World Series தொடரின் ஆறாவது ஆட்டத்தில் Los Angeles Dodgers வெள்ளிக்கிழமை (31) வெற்றி பெற்றது.

இம்முறை World Series தொடரில் Blue Jays அணியும் Los Angeles Dodgers அணியும் எதிர்கொள்கின்றன.

இந்த தொடரின் முதலாவது, நான்காவது, ஐந்தாவது  ஆட்டங்களில் Blue Jays அணியும், இரண்டாவது, மூன்றாவது ஆட்டங்களில் Dodgers அணியும் வெற்றி பெற்றது.

ஆறாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி பெற்றால் World Series பட்டத்தை வெற்றி பெறலாம் என்ற நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்டம் Rogers மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 3-க்கு 1 என்ற ஓட்ட வித்தியாசத்தில் Dodgers அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு ஆட்டங்கள் கொண்ட தொடர் 3-க்கு 3 என்ற நிலையில் சமமாக உள்ளது.

இந்த நிலையில் தொடரின் ஏழாவதும், இறுதியுமான ஆட்டம் சனிக்கிழமை (01) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி World Series பட்டத்தை வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடரில் போட்டியிடுகிறது.

Dodgers அணி கடந்த ஆண்டு World Series தொடரில் வெற்றி பெற்றது.

Related posts

G7 நிதி அமைச்சர்கள் கனடாவில் சந்திப்பு!

Lankathas Pathmanathan

மீண்டும் வெப்பமான கோடை காலத்தை எதிர்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment