November 15, 2025
தேசியம்
செய்திகள்

மூன்றாவது World Series பட்டத்தை வெற்றி பெறுமா Blue Jays?

Toronto Blue Jays அணி 30 ஆண்டுகளில் தமது முதலாவது World Series பட்டத்தை வெள்ளிக்கிழமை  (31) வெற்றி பெறும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

இம்முறை World Series தொடரில் Blue Jays அணியும் Los Angeles Dodgers அணியும் எதிர்கொள்கின்றன.

ஏழு ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஐந்து ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் 3-க்கு 2 என்ற நிலையில் Blue Jays அணி முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரின் ஆறாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்  Blue Jays அணி World Series பட்டத்தை வெற்றி பெறும்.

Blue Jays அணி World Series தொடரில்  ஆறாவது ஆட்டத்தில் ஒருபோதும் தோல்வியடையவில்லை.

வெள்ளி இரவு நடைபெறும் ஆட்ட வெற்றியுடன், மூன்றாவது முறையாக World Series பட்டத்தை  Blue Jays அணி   வெல்ல முடியும்.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடரில் போட்டியிடுகிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றி பெறும் அணி, World Series பட்டத்தை வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்

Lankathas Pathmanathan

World Series 2025: இரண்டாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி

Lankathas Pathmanathan

2022 FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு கனடா தகுதி பெற்றது!

Lankathas Pathmanathan

Leave a Comment