தேசியம்
செய்திகள்

ஆறு தமிழர்கள் போட்டியிடும் இடைத் தேர்தல் வாக்களிப்பு!

Toronto, Markham நகரங்களில் ஆறு தமிழர்கள் போட்டியிடும் இரண்டு இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது.

Scarborough-Rouge Park தொகுதியிலும், Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்திலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்களன்று நடைபெறுகிறது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்களிப்பு இரவு 8 மணிவரை தொடரவுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் Scarborough-Rouge Park தொகுதியில் தமிழ் வேட்பாளர்களான அனிதா ஆனந்தராஜன், நீதன் சான், சியான் சின்னராஜா, அனு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

ScarboroughRouge Park தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களான கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன் ஆகியோர் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.

Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Scarborough-Rouge Park தொகுதியில் முன்கூட்டிய வாக்களிப்பு September 20, 21-ஆம் திகதிகளில் நடைபெற்றது.

Markham நகரசபையின் ஏழாம் வட்டார முன்கூட்டிய வாக்களிப்பு 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெற்றது.

Related posts

FIFA 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டம்?

Lankathas Pathmanathan

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja

Leave a Comment