தேசியம்
செய்திகள்

ஆறு தமிழர்கள் போட்டியிடும் இடைத் தேர்தல் வாக்களிப்பு!

Toronto, Markham நகரங்களில் ஆறு தமிழர்கள் போட்டியிடும் இரண்டு இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது.

Scarborough-Rouge Park தொகுதியிலும், Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்திலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்களன்று நடைபெறுகிறது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்களிப்பு இரவு 8 மணிவரை தொடரவுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் Scarborough-Rouge Park தொகுதியில் தமிழ் வேட்பாளர்களான அனிதா ஆனந்தராஜன், நீதன் சான், சியான் சின்னராஜா, அனு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

Scarborough–Rouge Park தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களான கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன் ஆகியோர் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.

Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Scarborough-Rouge Park தொகுதியில் முன்கூட்டிய வாக்களிப்பு September 20, 21-ஆம் திகதிகளில் நடைபெற்றது.

Markham நகரசபையின் ஏழாம் வட்டார முன்கூட்டிய வாக்களிப்பு 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெற்றது.

Related posts

Ontario இலையுதிர் கால பொருளாதார அறிக்கை விரைவில்

Lankathas Pathmanathan

மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தேர்தல்

Lankathas Pathmanathan

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment