September 5, 2026
தேசியம்
செய்திகள்

Bishnoi குழு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

இந்தியாவின் Bishnoi குழுவை பயங்கரவாத அமைப்பாக கனடிய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு பாதுகாப்பு, உளவுத்துறை, காவல்துறை நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் என அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவில் வன்முறை, பயங்கரவாதச் செயல்களுக்கு இடமில்லை எனவும் இந்த முடிவு குறித்து அமைச்சர் அறிவித்தார்.

புலம்பெயர்ந்த கனடிய சமூகங்களில் Bishnoi அச்சுறுத்தல் நிறைந்த சூழலை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

Bishnoi குழுவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க இந்தத் தடை மத்திய அரசுக்கு அனுமதி வழங்குகிறது.

இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் Bishnoi உறுப்பினர்களைப் பயன்படுத்தி காலிஸ்தான் சார்பு நிலையான  ஆதரவாளர்களை குறிவைப்பதாக கடந்த ஆண்டு கனடிய காவல்துறையினர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Calgary சீக்கியர் கோவில் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

Lankathas Pathmanathan

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment