தேசியம்
செய்திகள்

மீண்டும் நகர முதல்வர் பதவிக்கு John Tory போட்டியிடுவார்?

Toronto நகர முதல்வர் பதவிக்கு John Tory மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த Toronto நகர முதல்வர் தேர்தல் October 2026-இல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் நகர முதல்வர் Olivia சோவ்-வை எதிர்த்து John Tory போட்டியிடுவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பிரச்சாரத்திற்கு முக்கியமாக இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் அவர் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் அவரது அரசியல் எதிரிகள் முன்னாள் நகர முதல்வருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துகின்றனர்.

தன்னை விட 40 வயது இளைய ஊழியருடன் உறவு இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, February 2023-இல் John Tory திடீரென பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pearson விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

மீண்டும் நாடாளுமன்றம் திரும்பும் Pierre Poilievre!

Lankathas Pathmanathan

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment