தேசியம்
செய்திகள்

ஈரான் பதற்றத்தை அதிகரிக்க விரும்புகிறது: கனடாவுக்கான ஐ.நா. தூதர் Bob Rae

ஈரான் பதற்றத்தை அதிகரிக்க விரும்புகிறது என கனடாவுக்கான ஐ.நா. தூதர் தெரிவித்தார்.

ஈரான் தான் நடத்தும் தாக்குதல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினாலும் அவ்வாறு செய்யும் திறன் அவர்களிடம் இல்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடியத் தூதர் Bob Rae தெரிவித்தார்.

கத்தாரில் உள்ள அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள Al Udeid விமானப்படை தளத்தின் மீது, ஈரான் திங்கட்கிழமை ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டு வீசித் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் இந்தப் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என கனடிய பிரதமர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் கனடிய தலைவர்கள்

Lankathas Pathmanathan

மெக்சிகோ சென்றடைந்தார் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment