தேசியம்
செய்திகள்

July இறுதிவரை மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் Torontoவில் இரத்து

Toronto நகரம்  மக்கள் ஒன்றுகூடும் முக்கிய நிகழ்வுகளை குறைந்தது July மாதம்வரை இரத்துச் செய்ய முடிவை செய்துள்ளது.
COVID தொற்றின் புதிய திரிபின் பரவலில் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Toronto நகர முதல்வர் John Tory இந்த அறிவித்தலை வெளியிட்டார். Toronto Marathon, கனடா தின கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் இரத்துச் செய்யப்படும் என Tory தனது அறிவித்தலில் குறிப்பிட்டார்.
 Torontoவில் தொற்றின் நாளாந்த எண்ணிக்கை 700 என்ற நிலையில் உள்ளதால் இந்த முடிவு அவசியமானது என நகரின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார். CNE இந்த வருடம் தமது வருடாந்த களியாட்ட நிகழ்வை நடத்துவது என முடிவு செய்துள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த பிரதமர்

தொடர்ந்தும் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள்!

Lankathas Pathmanathan

Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!