February 16, 2025
தேசியம்
செய்திகள்

புதிய துப்பாக்கிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்

கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது, கொள்வனவு செய்வது அல்லது விற்பனை செய்வது மீதான முடக்கம், இன்று கனடிய அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தின் மைய அம்சமாக அமைந்துள்ளது.

Liberal அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை (30) மாலை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino இந்த புதிய துப்பாக்கி சட்டத்தை சமர்ப்பித்தார்.

குடும்ப வன்முறை அல்லது துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து துப்பாக்கி உரிமத்தை அகற்றவும் இந்த மசோதா அனுமதிக்கும் என அரசாங்கம் கூறுகிறது.

குற்றவியல் தண்டனைகளை அதிகரிப்பதன் மூலம் துப்பாக்கி கடத்தலை எதிர்த்து போராட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

துப்பாக்கி சட்டங்களை மேலும் வலுப்படுத்த கடந்த தேர்தலில் பிரதமர் Justin Trudeau உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பதிவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் எண்ணிக்கை 2010 முதல் 2020 வரை 71 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020 வரை பதிவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் எண்ணிக்கை சுமார் 1.1 மில்லியனை எட்டுகிறது என மத்திய அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Related posts

குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தாய் மீது பதிவு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment