தேசியம்
செய்திகள்

Tariffs வரிகள் குறித்து கனடிய – அமெரிக்க தலைவர்கள் நேரடி உரையாடல்?

Tariffs வரிகளை அகற்றுவது குறித்த கலந்துரையாடல்களில் கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தில் G7 தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக Donald Trump அரசுடன் உடன்படிக்கைக்கு வரும் பேச்சுக்களில் கனடிய பிரதமர் Mark Carney ஈடுபட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் நேரடியாக சந்தித்த பின்னர், இருவரும் தனியே தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்து, இரு தலைவர்களும் மாலை வேளைகளில் சில தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதை தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த உரையாடல்கள் கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக போரில் ஒரு இணக்கம் காண்பது குறித்து அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பதை தொழில்துறை அமைச்சர் Mélanie Joly ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

ஆனாலும் இந்த உரையாடல்கள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ள tariffs வரிக்கட்டணங்கள், அமெரிக்காவின் உலோகங்களின் பெருமளவிலான வழங்குநராக உள்ள கனடிய வணிகங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மில்லியன் டொலர்கள் நிதி மோசடியை எதிர்கொள்ளும் தமிழ் குடும்பம்

Lankathas Pathmanathan

பொருளாதார மந்தநிலைக்கு பிரதமரே காரணம்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

Gaya Raja

Leave a Comment