தேசியம்
செய்திகள்

தமிழர் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து  விலகி இருக்க ஹரி ஆனந்தசங்கரி முடிவு!

தமிழர் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து  விலகி இருக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி முடிவு செய்துள்ளார்.
Global News ஊடகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அமைச்சரின் அலுவலகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.
தமிழர்கள் தொடர்பான முடிவுகளில் இருந்து தன்னை விலக்கி வைக்க அமைச்சர் அதிகாரிகளிடம் கோரியதாக தெரியவருகிறது.
எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.
“அனைத்து தேசிய பாதுகாப்பு முடிவுகளிலும், தனது பிரதானமாக கவனம் கனடியர்களின் பாதுகாப்பு” என அமைச்சர் Global News ஊடகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார்.
சட்ட அமுலாக்க, தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பணிகளை பாரபட்சமின்றி, திறம்பட முன்னெடுக்க தனது ஆதரவை வழங்குவேன் என ஹரி ஆனந்தசங்கரியின் அறிக்கை உறுதியளிக்கிறது.

Related posts

மீண்டும் ஆரம்பிக்கும் Ontario சட்டமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

Trudeau – Biden முதல் சந்திப்பு

Lankathas Pathmanathan

Torontoவில் வீட்டின் சராசரி விலை குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment