கனடாவில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமருக்கு கனடிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
G7 உச்சி மாநாடு June 15 முதல் 17 வரை Alberta மாகாணத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது அண்மைய ஆண்டுகளில் மோசமடைந்து வரும் கனடா-இந்தியா உறவுகளில் ஒரு மாற்றத்தை குறிக்கிறது.
இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளிக்கிழமை (06) தொலைபேசியில் உரையாடியதாக கனடிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
இந்த உரையாடலின் போது, G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடிக்கு Mark Carney அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை உறுதிப்படுத்திய நரேந்திர மோடி, கனடிய பிரதமரை மாநாட்டில் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
நரேந்திர மோடியை அழைக்கும் முடிவை கனடாவின் சீக்கிய சமூகம் கண்டித்து வருகிறது.
கனடாவில் நிகழ்ந்த சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar-ரின் கொலைக்கு இந்தியா காரணம் என முன்னாள் கனடிய பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரிசல் ஏற்பட்டுள்ளது.