தேசியம்
செய்திகள்

ஊடக அறமற்றது: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News செய்திக் கட்டுரையை கண்டிக்கும் கனடிய தமிழர் கூட்டு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News ஊடகத்தின் செய்திக் கட்டுரையை கனடிய தமிழர் கூட்டு வன்மையாக கண்டித்துள்ளது.

Global News ஊடகம் வெள்ளிக்கிழமை (06)   வெளியிட்ட கட்டுரையில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயலாற்றும் தகுதியை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

இந்தக் கட்டுரை ஊடக அறமற்றது என கனடிய தமிழர் கூட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கண்டித்துள்ளது.

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி ஒரு தமிழர் என்பதால், அவர் ஒரு இன ரீதியான தாக்குதலை எதிர்கொள்வதாக வெள்ளிஇரவு வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.

அமைச்சர் எந்த ஒரு தவறையும் இழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கனடிய தமிழர் கூட்டின் அறிக்கை, இதில் எந்த ஒரு ஒழுங்குமுறை மீறலும் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

Global News ஊடகம் இந்த விடயத்தில் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என கனடிய தமிழர் கூட்டின் அறிக்கை வலியுறுத்துகிறது.

கனடிய தமிழர் கூட்டின் அறிக்கை:
Statement by Canadian Tamil Collective:

Related posts

தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment