நான்கு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது.
October முதலாம் திகதி முதல் Ontario, Manitoba, Saskatchewan, Prince Edward Island ஆகிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது.
Ontarioவில் ஒரு மணி நேரத்திற்கு ஊதியம் 65 சதத்தினால் அதிகரித்து $17.20 ஆக உள்ளது.
Saskatchewanனின் குறைந்தபட்ச ஊதியம் ஒரு டொலரால் அதிகரித்து $15 ஆக உள்ளது.
Manitobaவில், ஊதியம் 50 சதத்தினால் அதிகரித்து $15.80 ஆக உள்ளது.
Prince Edward Islandடில் 60 சதத்தினால் அதிகரித்து குறைந்தபட்ச ஊதியம் $16 ஆக உள்ளது.