தேசியம்
செய்திகள்

Tariffs வரிகள் குறித்து கனடிய – அமெரிக்க தலைவர்கள் நேரடி உரையாடல்?

Tariffs வரிகளை அகற்றுவது குறித்த கலந்துரையாடல்களில் கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தில் G7 தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக Donald Trump அரசுடன் உடன்படிக்கைக்கு வரும் பேச்சுக்களில் கனடிய பிரதமர் Mark Carney ஈடுபட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் நேரடியாக சந்தித்த பின்னர், இருவரும் தனியே தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்து, இரு தலைவர்களும் மாலை வேளைகளில் சில தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதை தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த உரையாடல்கள் கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக போரில் ஒரு இணக்கம் காண்பது குறித்து அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பதை தொழில்துறை அமைச்சர் Mélanie Joly ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

ஆனாலும் இந்த உரையாடல்கள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ள tariffs வரிக்கட்டணங்கள், அமெரிக்காவின் உலோகங்களின் பெருமளவிலான வழங்குநராக உள்ள கனடிய வணிகங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை: NDP நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

$2.6 மில்லியன் மதிப்பிலான திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment