September 3, 2026
தேசியம்
செய்திகள்

சிம்மாசன உரைக்கு எதிராக வாக்களிக்க NDP முடிவு!

பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு எதிராக NDP வாக்களிக்க உள்ளது.

NDP-யின் இடைக்கால தலைவர் Don Davies இந்தத் தகவலை தெரிவித்தார்.

Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு எதிரான நம்பிக்கை வாக்களிப்பில் வாக்களிக்க NDP தீர்மானித்துள்ளதாக Don Davies கூறினார்.

இதன் மூலம் இந்த நம்பிக்கை வாக்களிப்பில் வெற்றி பெறுவதற்கு மற்றொரு எதிர்க்கட்சியின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு Liberal கட்சி தள்ளப்பட்டுள்ளது.

NDP-யின் சில பிரதான முன்னுரிமைகளுக்கு இந்த சிம்மாசன உரை இடமளிக்கவில்லை என செய்தியாளர்களிடம் Don Davies தெரிவித்தார்.

இந்த உரை கனடியர்களின் தேவைகளுக்கு முன்னுரிமைகளை வழங்கவில்லை எனவும் NDP கூறியது.

அரசாங்கத்தின் சிம்மாசன உரை ஒரு நம்பிக்கை வாககளிப்பாக அமைகிறது.

இந்த நம்பிக்கை வாக்களிப்பில் தோல்வியடைந்தால் Liberal அரசாங்கம் பதவி விலத்தப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெறக் கூடிய நிலை தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடியர்கள் உடனடியாக ஒரு தேர்தலை விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்வதாக Don Davies தெரிவித்தார்.

ஆனாலும் தமது சிம்மாசன உரை நம்பிக்கை வாக்களிப்பில் வெற்றி பெறும் என உறுதியுடன் உள்ளதாக அரசாங்கத்தின் நாடாளுமன்ற தலைவர் Steven MacKinnon கூறினார்.

இதில் Conservative கட்சி எவ்வாறு வாக்களிக்கும் என்பதை தெரிவிக்கவில்லை.

தனது வாக்கு சிம்மாசன உரைக்கு ஆதரவாக இருக்கும் என பசுமை கட்சித் தலைவர் Elizabeth May தெரிவித்தார்.

Related posts

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

Ontario Science Centre மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment