தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு குறுக்கீட்டு பங்கேற்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதில் கட்சிகளிடையே உடன்பாடு இல்லை

கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீட்டு பங்கேற்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதில் கட்சிகளிடையே உடன்பாடு இல்லாத நிலை தொடர்கிறது.

வெளிநாட்டு தலையீட்டில் பங்கேற்றதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமா என்பதில் கட்சிகளிடையே உடன்பாடு இல்லாத நிலை தொடர்கிறது.

வெளிநாட்டு தலையீட்டில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பாளர்களாக உள்ளனர் என்ற கவலை  உளவுத்துறைக்கு  உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசிய பாதுகாப்பு, புலனாய்வு குழுவின் அண்மைய அறிக்கை கூறுகிறது.

கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையிட உதவியவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆனாலும் இந்த முடிவை சட்ட அமுலாக்கப் பிரிவினர் எடுக்க வேண்டும் என Liberal அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவும் குற்றவியல் விசாரணை நடைமுறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த RCMP மறுத்துள்ளது.

Related posts

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan

Leave a Comment