February 12, 2025
தேசியம்
செய்திகள்

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை Toronto Pearson சர்வதேச விமான நிலைய நடத்துனர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள COVID பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என Toronto பெரும்பாக விமான நிலைய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இன்னும் சில தினங்களில் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் Pearson சர்வதேச விமான நிலையத்தில் 10 சதவீதம் வரையிலான Air Canada விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையங்களில் ஏற்படும் கால தாமதங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவுக்காகப் போராடும் கனடியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

Lankathas Pathmanathan

வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment