தேசியம்
செய்திகள்

மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்”: Mark Carney

காசாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்” என பிரதமர் Mark Carney கூறினார்.

காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கம் தவறியதை கனடா கண்டிக்கிறது.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய அனுமதிக்க வேண்டும் என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகள் தீர்வு குறித்து கவனம் செலுத்தும் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அடுத்த வாரம் New York நகரம் செல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

உடனடி போர் நிறுத்தம் அவசியம் என தெரிவித்த அனிதா ஆனந்த் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Related posts

ராஜபக்ச சகோதரர்கள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடை!

Lankathas Pathmanathan

April 5ஆம் திகதிக்கு பின்னர் கனடாவில் மிகக் குறைந்த COVID தொற்று பதிவு !

Gaya Raja

 $1 பில்லியன் மதிப்பிலான அமெரிக்காவின் அதிரடி இறக்குமதித் தடை 

Lankathas Pathmanathan

Leave a Comment