தேசியம்
செய்திகள்

Alberta NDP தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் Calgary நகர முதல்வர்

Alberta மாகாண  NDP தலைமைப் பதவிக்கு முன்னாள் Calgary நகர முதல்வர் போட்டியிடுகிறார்.

முன்னாள் Calgary நகர முதல்வர் Naheed Nenshi,  Alberta NDP தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Alberta NDP தலைவராகவும், மாகாணத்தின் அடுத்த முதவராகவும் போட்டியிடும் எண்ணத்தை
திங்கட்கிழமை அவர் அறிவித்தார்.

அனைவரும் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள், முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் திறமையான அரசாங்கத்திற்கு Alberta வாசிகள் தகுதியானவர்கள் என அவர் கூறினார்.

Naheed Nenshi, Calgary நகர முதல்வராக 11 ஆண்டுகள் பணியாற்றினார்.

Alberta மாகாண  NDP தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக Rachel Notley கடந்த January மாதம் அறிவித்தார்.

Alberta மாகாண  NDP தலைமைப் பதவிக்கு ஐந்து பேர் தங்கள் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு May 22ஆம் திகதி ஆரம்பமாகிறது.

ஒரு புதிய தலைவர் June 22 அன்று நியமிக்கப்படுவார்.

Related posts

Richmond Hill இல்லத்தில் ஐந்து மாத குழந்தை உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

நான்காவது நாளாகவும் Ontarioவில் 200க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

மின்சார வாகனங்களை உருவாக்க கனடிய வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம்?

Lankathas Pathmanathan

Leave a Comment