Al-Qaeda நிறுவனர் Osama bin Laden-னுடன் தொடர்பில் இருந்த கனடியர் கைது செய்யப்பட்டார்.
51 வயதான Mohammed Abdullah Warsame என்பவர் Montreal நகரில் கைது செய்யப்பட்டார்.
Somali-வில் பிறந்த கனடிய குடியுரிமையளரான இவர், புதன்கிழமை RCMP-யினால் கைது செய்யப்பட்டார்.
May 26 -ஆம் திகதி நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
Osama bin Laden-னுடன் தொடர்புகள் உள்ளவர் என்ற குற்றங்களில் அமெரிக்காவில் தண்டிக்கப்பட்ட இவர், Montreal-லில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை கொல்ல மிரட்டியதாக RCMP கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடர்கிறது.
2009-ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவில் தீவிரவாத குற்றத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர், பின்னர் கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.