September 18, 2026
தேசியம்
செய்திகள்

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்த இரண்டு கனடிய விமானப்படையினர் உடல்கள் மீட்பு

உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு கனடிய விமானப்படை பணியாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

செவ்வாய்கிழமை (20) மாலை Ottawa ஆற்றில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு உறுப்பினர்களின் இழப்பிற்காக வருந்துகிறோம் என பாதுகாப்பு பணியாளர்கள் தலைவர் Gen. Wayne Eyre ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CH-147 Chinook உலங்குவானூர்தி பயிற்சிப் பயணத்தின் போது தண்ணீரில் விழுந்து நொறுங்கியதை தேசிய பாதுகாப்புத் துறை புதனன்று உறுதிப்படுத்தியது.

விபத்தின் போது உலங்குவானூர்தியில் இருந்த நான்கு பேர் கொண்ட மொத்தக் குழுவினரில் பலியான பணியாளர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்கள் அவசர உதவி பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு Pembroke மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறு காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆளுநர் நாயகம் Mary Simon, பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford ஆகியோர் தமது இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து Royal கனடிய விமானப்படையின் விமான பாதுகாப்பு இயக்குநரகம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்புத் துறை கூறுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த உலங்குவானூதிகளை தரையிறக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

Related posts

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது!

Lankathas Pathmanathan

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளில் கனடிய கடவுச்சீட்டுக்கும் இடம்?

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

Gaya Raja

Leave a Comment