தேசியம்
செய்திகள்

Hamilton நகரில் தீயில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் பலி

Hamilton நகரில் வீடொன்று தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை (29) பின்னிறவு 11 மணியளவில் வீட்டில் தீப்பிடித்தது குறித்த அழைப்பு Hamilton தீயணைப்புக் குழுவினருக்கு விடுக்கப்பட்டது

ஏறக்குறைய 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாக தீயணைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் மீது தீயணைப்புக் குழுவினர் உயிர்காக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்

இந்த நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்

இந்த சம்பவைத்தில் மேலும் இரண்டு நபர்களும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Hamilton காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்களின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேவேளை உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விசாரணைகள் தொடரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

தீயினால் சேதமடைந்த வீட்டின் இருபுறமும் உள்ள இரண்டு வீடுகளில் குடியிருப்பவர்களும் தீயணைப்பு பணியாளர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் வெள்ளிக்கிழமை (30) காலை மீண்டும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து Hamilton நகர முதல்வர் Andrea Horwath தனது இரங்கலை தெரிவித்தார்.

Related posts

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

Lankathas Pathmanathan

COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும்!

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment