November 10, 2024
தேசியம்
செய்திகள்

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவரும் எதிர்கொள்கின்றார்.

52 வயதான சுதேஷ்குமார் சிதம்பரம்பிள்ளை என்ற தமிழர் மீதும் Ontario மாகாண காவல்துறை (OPP) குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. Steve பிள்ளை என்ற பெயரை உபயோகிக்கும் இவர் Highway 400 and Sheppard சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள Steve’s Towing என்ற நிறுவனத்தின் உரிமையாளராவார்.

Steve’s Towing நிறுவனம்

நேற்று (சனி), OPP Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்து தனது மூத்த அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்றச் சாட்டுக்களை பதிவு செய்ததுடன் நான்கு பேரை பணி இடைநீக்கம் செய்திருந்தது. Toronto பெரும்பாக பகுதிக்குள் உள்ள Towing நிறுவனங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் முன்னுரிமை அளித்ததாக OPP குற்றம் சாட்டுகின்றது.

சிதம்பரம்பிள்ளை April மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

11 பேர் இறந்த Saskatchewan கத்திக் குத்துக்கு ஒருவரே பொறுப்பு: RCMP

Lankathas Pathmanathan

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja

Leave a Comment