கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமைச்சரவையின் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
கனடாவின் போக்குவரத்து அமைச்சராக (Minister) அனிதா ஆனந்த், பிரதி அமைச்சராக (Deputy Minister) அருண் தங்கராஜ் ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
மீண்டும் அமைச்சரானார் அனிதா ஆனந்த்!
தமிழரான அனிதா ஆனந்த், கனடாவின் போக்குவரத்து அமைச்சராக ( Minister of Transport) வியாழக்கிழமை (19) பதவியேற்றார். Justin Trudeau அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. ஏற்கனவே கருவூல வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு பதவி புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னேரே வேறு அமைச்சு பதவிகளை வகித்தவராவார்.
தொழில்முறை வழக்கறிஞரான இவர், 2019 முதல் வரை 2021 பொது சேவைகள், கொள்முதல் அமைச்சராக (Public services and Procurement) பதவி வகித்தவர். COVID தொற்று காலத்தில் கனடாவின் தடுப்பூசிகள் (Vaccines) , தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (Personal Protective Equipment – PEP) கொள்வனவை அவர் மேற்பார்வையிட்டார். 2021 முதல் 2023 வரை, அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சராக (Minister of National Defence) பணியாற்றினார்.
அனிதா ஆனந்த், கனடாவில் அமைச்சு பதவி வகித்த முதலாவது தமிழர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை ஒரு தமிழராவார்.
போக்குவரத்து துணை அமைச்சர் அருண் தங்கராஜ்!
போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் February 20, 2023 நியமிக்கப்பட்டவர். இவர் முன்னர் குடிவரவு, அகதிகள், குடியுரிமை இணை துணை அமைச்சராக (Associate Deputy Minister at Immigration, Refugees and Citizenship) இருந்தார்.
முன்னதாக கனடா போக்குவரத்து இணை துணை அமைச்சராகவும் (Associate Deputy Minister at Transport Canada) அவர் பதவி வகித்தவர். கனடிய வெளிவிவகார அமைச்சின் உதவி துணை அமைச்சராகவும் (Assistant Deputy Minister), தலைமை நிதி அதிகாரியாகவும் (Chief Financial Officer) அவர் பதவி வகித்தார்.