தேசியம்
செய்திகள்

கனேடிய தங்க மகன் De Grasse!

Tokyo ஒலிம்பிக்கில் கனேடிய வீரரான Andre De Grasse தங்கம் வென்றார்.

புதன்கிழமை நடைபெற்ற 200 மீட்டர் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 26 வயதான De Grasse  தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

19.62 வினாடிகளில் வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம்  அவர் புதிய கனேடிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார்.

இதன் மூலம் De Grasse  தனது ஐந்தாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார். ஏற்கனவே இம்முறை  ஆண்களுக்கான 100 மீட்டரில் அவர் வெண்கலம் வென்றிருந்தார்.

Tokyo ஒலிம்பிக்கில் இதுவரை கனடா 4 தங்கம், நான்கு வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியது Air Canada

Lankathas Pathmanathan

Scarborough உயர்நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Conservative தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள்!

Leave a Comment