September 17, 2026
தேசியம்
செய்திகள்

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்கு அழைக்கப்பட மாட்டார்?

இஸ்ரேலிய பிரதமரை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள அழைக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவரை கனடாவுக்கு பயணம் செய்ய அழைப்பதற்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை என பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (20) கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வந்த நிலையில், விரைவில் இஸ்ரேல் பிரதமர் கனடிய பிரதமருடன் பேச உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலில் அதிகரித்து வரும் வன்முறை, நீதித்துறை சீர்திருத்தம் குறித்து கனடா கவலை தெரிவித்து வருகிறது.

Related posts

Montreal: கத்திக் குத்தில் மூவர் மரணம்

Lankathas Pathmanathan

தேசிய Holocaust நினைவுச் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட Ottawa நகர வழக்கறிஞர் பணி நீக்கம்!

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தின் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment