September 30, 2026
தேசியம்
செய்திகள்

Paul Bernardo தொடர்ந்து நடுத்தர பாதுகாப்பு சிறையில்

Quebec நடுத்தர பாதுகாப்பு சிறையில் தொடர் கொலையாளி Paul Bernardo தொடர்ந்து தடுத்து வைக்கப்படவுள்ளார்.

கனடாவின் சீர்திருத்த சேவை ஆணையாளர் Anne Kelly வியாழக்கிழமை (20) இந்த தகவலை வெளியிட்டார்.

Ontarioவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் இருந்து Quebecகில் உள்ள நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு Paul Bernardo கடந்த May மாத இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆனாலும் இந்த முடிவு மாற்றப்படாது என ஆணையாளர் Anne Kelly கூறினார்.

சர்ச்சைக்குரிய இந்த முடிவு பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களையும் கொள்கைகளையும் பின்பற்றியது, என ஒரு மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.

Related posts

Patrick Brown முன்னெடுத்த $1,700 நிதி சேர் நிகழ்வு

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலகும் அனிதா ஆனந்த்!

Lankathas Pathmanathan

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment