Hanta தொற்று எச்சரிக்கை காரணமாக மூன்று கனடியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் Ontario மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் Quebec மாகாணத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டனர்.
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
இவர்கள் மூவருக்கும் நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர் எனவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சொகுசுக் கப்பலில் பயணித்த கனடியர்களுக்கு உதவ கனடிய தூதரக அதிகாரிகள் தயாராக உள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
Hanta தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் பயணித்த இரண்டு கனடியர்கள் Ontario மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இவர்கள் இருவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண சுகாதார அமைச்சர் Sylvia Jones தெரிவித்தார்.
Hanta தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பயணி பயணித்த விமானத்தில் Quebec மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் பயணித்ததை, Quebec சுகாதார அமைச்சர் Sonia Bélanger வியாழக்கிழமை (07) உறுதிப்படுத்தினார்.
குறிப்பிட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்த நோய் அறிகுறிகளும் இல்லை எனவும் Sonia Bélanger கூறினார்.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து “மிகக் குறைவாகவே” இருப்பதாகவும், “ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு” நோய் பரவுவது “மிகவும் அரிது” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் Hanta தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட நோய்ப் பரவலை தொடர்ந்து, எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, இதுவரை பதிவான எட்டு வழக்குகளில் ஐந்து Hanta தொற்று பாதிப்பு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் April 24 அன்று தெற்கு Atlantic தீவான St. Helena-வில் கப்பலில் இருந்து வெளியேறியதாக தெரியவருகிறது
Hantavirus பரவலுக்கும் COVID-19 பெருந்தொற்று ஆரம்பத்திற்கு இடையே ஒற்றுமைகள் இருந்தாலும், அவை இரண்டும் ஒரே வகையான தொற்று அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம் என தொற்றுநோயியல் நிபுணர் Dr. Christophe கூறினார்.
