தேசியம்
செய்திகள்

Manitoba மாகாணத்தில் அவசர நிலை?

Manitoba மாகாண பொது சுகாதார பிரிவு அவசர நிலையை அறிவித்தது.

HIV தொற்று விகிதங்கள் காரணமாக Manitoba பொது சுகாதார பிரிவு இந்த  அவசர நிலையை அறிவித்தது.

மாகாணத்தின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Brent Roussin, வியாழக்கிழமை (07) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கனடாவில் மிக அதிக HIV தொற்று பாதிப்பு விகிதங்களை கொண்ட பகுதியில் Manitoba மாகாணம் தொடர்ந்து இருந்து வருவதாக அவர் கூறினார்.

2024-ஆம் ஆண்டில், அந்த மாகாணத்தில் ஒரு லட்சம் பேருக்கு 19.5 பேர் என்ற அளவில் நோய் தொற்று பாதிப்பு இருந்தது.

இது ஒரு லட்சம் பேருக்கு 5.5 பேர் என்ற தேசிய HIV தொற்று விகிதத்தை விட ஏறத்தாழ 3.5 மடங்கு அதிகமானதாகும்.

கடந்த ஆண்டு Manitoba-வில் 328 புதிய HIV பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2021-ல் 142 பாதிப்புகள் பதிவானதாக Dr. Brent Roussin குறிப்பிட்டார்.

“இது முக்கியமானது; கவலையளிப்பது,” என கூறிய அவர் “இதற்கு அரசாங்கங்கள், சமூகங்கள், காதார அமைப்புகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை” என வலியுறுத்தினார்.

Related posts

1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் Bell கனடா

Lankathas Pathmanathan

வைத்தியசாலைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

Gaya Raja

விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment