September 30, 2026
தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விலை இந்த வாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடனான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்வு கூறப்படுகிறது.

Toronto பெரும்பாக பகுதியில் வெள்ளிக்கிழமை (10) எரிபொருளின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியன்று petrol விலை litre 5 சதம் உயர்ந்து 169.9 சதமாகவும், diesel விலை  litre 13 சதம் வரை உயர்ந்து 198.9 சதமாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தொடர்ந்து வார இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மேலும் ஐந்து சதம் அல்லது அதற்கும் அதிகமாக உயரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் எரிபொருளின் விலையில் படிப்படியான உயர்வு இருக்கும் எனவும், ஒரு litre சராசரியாக 10 முதல் 15 சதம் வரை விலை அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

234 கனேடியர்கள் ஞாயிறு காசாவை விட்டு வெளியேறினர்

Lankathas Pathmanathan

ஒரு நாளுக்கான அதிகூடிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட புதிய சாதனை Torontoவில் பதிவு

Gaya Raja

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment