September 13, 2026
தேசியம்
செய்திகள்

வீதி விபத்தில் OPP அதிகாரி உட்பட இருவர் மரணம்

Ontarioவின் Woodstock நகரில் திங்கட்கிழமை (29) நிகழ்ந்த விபத்தில் OPP அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

திங்கள் காலை 7 மணியளவில் OPP வாகனமும் பாடசாலை பேருந்தும் மோதியதாக Ontario மாகாண காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் சாரதிகள்  உயிரிழந்துள்ளனர்.

பலியான காவல்துறை அதிகாரி 35 வயதான Det. Const. Steven Tourangeau என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு பணியில் இருக்கும் போது இறந்த ஆறாவது OPP அதிகாரி இவராவார்.

Related posts

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய பன்னாட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கையில் கனடியர்களும் அடக்கம்?

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment