தேசியம்
செய்திகள்

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onley அரசமுறை இறுதிச் சடங்கில் நினைவுகூரப்பட உள்ளார்.

January மாதம் 30ஆம் திகதி Onley நினைவுகூரப்பட உள்ளார்.

இவரது மரணம் தற்போதைய மாகாண முன்னாள் ஆளுநரால் கடந்த சனிக்கிழமை (14) அறிவிக்கப்பட்டது.

January மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் Ontario சட்டமன்றத்தில் Onleyயின் உடல் அஞ்சலுக்கு வைக்கப்படும்.

தொடர்ந்து 30ஆம் திகதி Torontoவில் உள்ள தேவாலயத்தில் அரச முறையிலான இறுதிச் சடங்கு நடைபெறும்.

2007ஆம் ஆண்டு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட Onley ஏழு ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

மரணமடையும் போது அவருக்கு வயது 72 ஆகும்.

Related posts

கனடாவில் 500க்கும் குறைவான தொற்றுக்கள் திங்களன்று பதிவு

Gaya Raja

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு

Lankathas Pathmanathan

Albertaவில் செவ்வாய் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Leave a Comment