தேசியம்
செய்திகள்

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Kitchener நகரில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர்.

புதன்கிழமை (18) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஒரு ஆணும் பெண்ணும் கடுமையான காயமடைந்தனர்.

தவிரவும் இரண்டு குழந்தைகள் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னிரவு 11:45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Waterloo பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் அயலவர்களின் வீடுகளும் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சேதத்தை எதிர் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் சிலரும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து Waterloo பிராந்திய காவல்துறையினர், Kitchener தீயணைப்பு பிரிவினர், Ontario Fire Marshal ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

2024 Stampede நிகழ்வில் காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை

Lankathas Pathmanathan

Ontario அரசின் காசோலைகள் விரைவில் அனுப்பப்படும்

Lankathas Pathmanathan

COVID காரணமாக கனடாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள்!

Gaya Raja

Leave a Comment