September 7, 2026
தேசியம்
செய்திகள்

Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான தடுப்பூசி குறித்த இணக்கப்பாடு

கனடாவின் Albertaவிற்கும் அமெரிக்காவின் Montanaவிற்கும் இடையிலான COVID  தடுப்பூசி இணக்கப்பாடொன்று அறிவிக்கப்பட்டது.

Albertaவின் முதல்வர்  Jason Kenney வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார். Albertaவின் கனரக வாகன ஓட்டுனர்களுக்காக தடுப்பூசிகளை Montana வழங்கும் என Kenney கூறினார்.

Alberta-Montana நில எல்லை ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய வணிக கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம்   ஆரம்பமாகின்றது. 

Related posts

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

வீதி விபத்தில் OPP அதிகாரி உட்பட இருவர் மரணம்

Lankathas Pathmanathan

12 மில்லியன் கனடியர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு நீங்களும் தகுதியுள்ளவரா?

Lankathas Pathmanathan

Leave a Comment