தேசியம்
செய்திகள்

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கிய தமிழரை தேடும் பணி

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்படும் தமிழரான அவசர மருத்துவ உதவியாளரை தேடும் பணி தொடர்கிறது.

இந்த முதற்குடி சமூகத்தின் அண்டை சமூகங்களும் Ontario மாகாண காவல்துறையும் இந்த தேடுதல் முயற்சிகளுக்கு உதவுகின்றன

நேற்று முன்தினம் முதல் காணாமல் போனதாக தேடப்படும்  அவசர மருத்துவ உதவியாளரான இவர், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Kashechewan முதற்குடி சமூகத்தில் இருந்து 20 படகுகளும் 50 தனி நபர்களும் இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
இந்த சமூகத்தில் புதியதாக கடமையாற்ற சென்ற அவசர மருத்துவ உதவியாளர், மற்றொரு துணை அவசர மருத்துவ உதவியாளர், ஒரு செவிலியர் ஆகியோருடன் உதவி பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

Gaya Raja

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment