Ontarioவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை 3,166 தொற்றுகளும் 23 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன. Ontarioவில் வியாழக்கிழமை 3,424, புதன்கிழமை 2,941 செவ்வாய்கிழமை 2,791 என தொற்றுக்கள் பதிவாகியிருந்தன
இதன் மூலம் மாகாணத்தின் ஏழு நாளுக்கான நாளாந்த சராசரி 3,265 தொற்றுக்களாக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 3,265ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வைத்தியசாலையில் 1,924 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அவசர சிகிச்சை பிரிவில் 853 பேர் உள்ளனர். 611 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.