குறிப்பிடத்தக்க கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் Manitobaவில் நடைமுறைக்கு வரவுள்ளன.
வணிகங்களை பரவலாக மூடுவது, சமூகம், கலாச்சார, மத கூட்டங்களை தடை செய்வது உட்பட்ட நடைமுறைகள் இந்த கட்டுப்பாடுகளில் அடங்குகின்றன. தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussin இந்த பொது சுகாதார நடவடிக்கைகளில் மாற்றங்களை அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவுகள் May மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.