Ontario மாகாண அரசின் COVID பரவல் எதிர்பு நடவடிக்கையை விமர்சித்த PC கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
York Centre தொகுதியின் Progressive Conservative கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Roman Baber கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
Ontario மாகாணத்தின் கட்டுப்பாடுகள் COVID தொற்றை விட ஆபத்தானது என Baber பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனம் அடங்கிய கடிதம் ஒன்றை அவர் மாகாண முதல்வருக்கு அனுப்பியிருந்தார்.
இவரது விமர்சனத்தை பொறுப்பற்ற கருத்துகள் என கூறிய முதல்வர் Doug Ford அவரை கட்சியில் இருந்து விலக்கியுள்ளார்.
அதேவேளை அடுத்த தேர்தலில் PC கட்சியின் உறுப்பினராக போட்டியிட Roman Baber அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் Ford கூறினார்.
இந்த நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கான முடிவை வருந்தத்தக்கது எனவும் Roman Baber கூறினார்
