தேசியம்
செய்திகள்

தனது மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலத்திய முதல்வர் Ford!

Ontario மாகாண அரசின் COVID பரவல் எதிர்பு நடவடிக்கையை விமர்சித்த PC கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்.

York Centre தொகுதியின் Progressive Conservative கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Roman Baber கட்சியில் இருந்து விலத்தப்பட்டார். Ontario மாகாணத்தின் கட்டுப்பாடுகள் COVID தொற்றை விட ஆபத்தானது என Baber பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனம் அடங்கிய கடிதம் ஒன்றை அவர் மாகாண முதல்வருக்கு அனுப்பியிருந்தார். இவரது விமர்சனத்தை பொறுப்பற்ற கருத்துகள் என கூறிய முதல்வர் Doug Ford அவரை கட்சியில் இருந்து விலத்தியுள்ளார். அதேவேளை அடுத்த தேர்தலில் PC கட்சியின் உறுப்பினராக போட்டியிட Baber அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் Ford கூறினார்.

இந்த நிலையில் தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கான முடிவை வருந்தத்தக்கது எனவும் Baber கூறினார்

Related posts

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

இருவரின் உடல்கள் N.S. கரையோரம் மீட்பு

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

Lankathas Pathmanathan

Leave a Comment