தேசியம்
செய்திகள்

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைவதை இன்று (வெள்ளி) வெளியான கனடாவின் புதிய modelling தரவுகள் காட்டுகின்றது

COVID பரவலானது நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருவதை இன்று வெளியான modelling விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றது. பல்லாயிரக் கணக்கான புதிய தொற்றுகளும் ஆயிரக்கணக்கான கூடுதல் இறப்புகள் எதிர்வரும் வாரங்களில் கணிக்கப்படுகின்றன.

கனடா மொத்தம் 796,630 தொற்றுக்களையும் 19,630 மரணங்களையும் Janaury மாதம் 24ஆம் திகதிக்குள் எதிர்கொள்ளலாம் என இன்று வெளியான modelling விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றது. இன்று வெளியான புதிய modelling ஊடான குறுகிய கால முன்னறிவிப்பு விரைவான வளர்ச்சியின் தொடர்ச்சியை காட்டுகின்றது. கனடியர்கள் மற்றவர்களுடன் இப்போது உள்ள அளவிலான நெருக்கமான தொடர்பைத் தொடர்ந்தால், தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது

இதனை குறைப்பதற்கான ஒரே வழி நேரடி தொடர்புகளை குறைத்துக் கொண்டே இருப்பதாகும் என்று பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கட்டுப்பாடுகளின் அளவையும் தீவிரத்தையும் மேலும் தீவிரப்படுத்தாவிட்டால், தற்போதைய பரவல் வீதத்தை கனடாவால் அடக்க முடியாது என தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam எச்சரித்தார்.

Related posts

Nova Scotiaவில் தடுப்பூசி வழங்கும் உதவியில் இராணுவம்

Lankathas Pathmanathan

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Albertaவில் ஐந்து நாட்களில் 4,903 தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!