September 11, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Ontarioவில் அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது.

இன்று (செவ்வாய்) நள்ளிரவு 12:01 முதல் இந்த அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு இந்த அவசரகால நிலை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவில் முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். Ontarioவின் இரண்டாவது அவசர நிலையாக இது அமைந்துள்ளது. இந்த அறிவித்தலின் ஒரு பகுதியாக வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவும் அமைந்துள்ளது. இந்த அவசரகால பிரகடனத்தின் கீழ், வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை அறிவித்தல் வெளியானது.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை குறைக்க NDP திட்டம்

Lankathas Pathmanathan

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment