November 16, 2025
தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா?

COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா உள்ளதாக கூறப்படுகிறது.

பல மாதங்களாக தொற்றின் எண்ணிக்கையின் நீண்ட சரிவின் பின்னர், அண்மையில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனாலும் தொற்றின் பாதிப்பு  குறித்து எதிர்வு கூற முடியாது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரங்களில் நாடளாவிய ரீதியில் COVID தொற்று அதிகரிப்பு 10 பிராந்தியங்களில் பதிவாகியுள்ளன.

August மாதம் 15ஆம் திகதி வரையிலான தொற்றின் தகவல்களை உள்ளடக்கிய சமீபத்திய தரவு August மாதம் 22ஆம் திகதி  வெளியானது.

August 6 முதல் 12 வரையிலான வாரத்தில் கனடாவில் 2,071 தொற்றுகள் பதிவாகின.

இருப்பினும், அறிக்கையிடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தொற்றின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுகிறது.

Related posts

Calgary பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம்: Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைக்கப்படும்!

Lankathas Pathmanathan

Leave a Comment