தேசியம்
செய்திகள்

எரிபொருள் மீதான வரி விலக்கு நீட்டிக்கப்படுமா?

எரிபொருள் (Gas) மீதான வரி விலக்கு திட்டத்தை புதிய ஆண்டு வரை நீட்டிக்க Mark Carney அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

வாகன சாரதிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த வரி சலுகை January 31, 2027 வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த முறையான அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்படும் என ஊடக வட்டாரங்கள் தகவல் பகிர்ந்துள்ளது.

நிதி அமைச்சர் François-Philippe Champagne புதன்கிழமை (02) இந்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எரிபொருள் செலவைக் குறைக்கும் என கருதப்படுகிறது.

அமெரிக்கா-ஈரான் மோதலுக்கு மத்தியில் நிலவிய நிலையற்ற எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு April மாதம் முதல் அறிவிக்கப்பட்ட இந்த வரி விலக்கு திட்டம், தொழிலாளர் தினமன்று (Labor Day) முடிவுக்கு வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா எதிர்கொள்ளும் மிகவும் தீவிரமான சூழ்நிலை: பிரதமர் விளக்கம்

Lankathas Pathmanathan

P.E.I. இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது

Lankathas Pathmanathan

Toronto நகர சபை இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment