தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

புதிய ஜனநாயக கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வியாழக்கிழமை வெளியிட்டது.

தனது கட்சி ஆட்சி அமைத்தால், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதாகவும், மனநல சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துவதாகவும், ஒரு மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவதாகவும், தடுப்பூசி உற்பத்திக்காக ஒரு அரச நிறுவனத்தை அமைப்பதாகவும் NDP தலைவர் Jagmeet Singh உறுதியளித்தார்.

“Commitments to Canadians” என்ற தலைப்பில் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தொற்று மீட்புக்கான திட்டம் ஒன்றும் அடங்கியுள்ளது.

இந்த 115 பக்க ஆவணத்தில் பெரும்பாலானவை முந்தைய தேர்தல்கள் உட்பட, புதிய ஜனநாயகக் கட்சியால் முன்னர் செய்யப்பட்ட உறுதிமொழிகளையும் உள்ளடக்கியது.

தவிரவும் கடந்த 18 மாதங்களில் கனேடியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முகம்கொடுக்க புதிய யோசனைகளும் இதில் அடங்கியுள்ளதாக NDP கூறுகிறது.

Related posts

கனடாவில் ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் COVID உதவித் தகுதிகளை தற்காலிகமாக விரிவுபடுத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment