மாதாந்த வீட்டுக் கடன் தவணைகளை செலுத்துவதில் நாடளாவிய ரீதியில் வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கடும் நிதி அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
கனடாவில் வட்டி விகிதங்கள் மீண்டும் ஆரம்பிக்க தொடங்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
Equifax கனடா வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டு நுகர்வோர் கடன் போக்குகள் அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியானது.
இந்த அறிக்கையின் படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வீட்டுக் கடன் தவணைகளை தவறவிட்டவர்களின் தேசிய விகிதம் 0.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது 2013-ம் ஆண்டு Equifax கனடா இத்தரவை கண்காணிக்க ஆரம்பித்ததிலிருந்து பதிவான மிக அதிகபட்ச அளவாகும்.
குறிப்பாக Ontario, British Columbia ஆகிய மாகாணங்களில் கடும் பாதிப்பு எதிர்வு கூறப்படுகிறது.
தேசிய அளவிலான இந்த வீட்டுக் கடன் நிலுவை விகிதம் கடந்த ஆண்டை விட 31.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் Ontario, British Coloumbia மாகாணங்களில் தவறவிடப்பட்ட வீட்டுக் கடன் தவணைகளே ஆகும் என கூறப்படுகிறது.
குறிப்பாக Ontario-வில் எதிர்கொள்ளப்படும் மிக உயர்ந்த அளவு இதுவாகும் என தெரிவித்த Equifax கனடாவின் துணைத் தலைவர் Rebecca Oakes, இது இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறினார்.
இந்த நிலையில் Ontario-வில் வீட்டுக் கடன் நிலுவைகள் பெருந்தொற்றுக்கு முந்தைய அளவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து, 2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்ட அளவை நெருங்கியுள்ளதாக TD வங்கியின் சமீபத்திய அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் கனடிய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை கால் சதவீதம் உயர்த்தி 2.5 சதவீதமாக நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து பிரதான வங்கிகளும் தங்களின் முதன்மை வட்டி விகிதங்களை அதிகரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய வங்கி இந்த ஆண்டின் தனது இறுதி வட்டி விகித முடிவை வரும் December 9-ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.
இதில் மீண்டும் கால் சதவீத வட்டி உயர்வு ஏற்பட 63 சதவீதம் வாய்ப்புள்ளதாக நிதிச் சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
