கனடாவின் தொழில்நுட்பத் திறன் சார் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மிகை ஊதிய (bonus) தொகை அடுத்த மாத ஆரம்பத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
கனடிய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (24) அதிகாரப்பூர்வமாக இந்த அறிவித்தலை வெளியிட்டது.
கனடாவின் தொழில்நுட்பத் திறன்சார் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட $5,000 மிகை ஊதிய தொகை, December மாத ஆரம்பத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் Red Seal அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பத் திறன்சார் பணியாளர்களுக்கான $5,000 நிறைவு ஊக்கத்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகக் கனடிய வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் Patty Hajdu அறிவித்துள்ளார்.
April 1, 2025 அன்று அல்லது அதற்குப் பின்னர் Red Seal தொழிலில் தொழிற்பயிற்சியை முடித்துச் சான்றிதழ் பெற்ற பணியாளர்கள் $5,000 ஊக்கத்தொகைக்கு கடந்த வாரம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுவரை 16,000-க்கும் மேற்பட்ட இதுபோன்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு December முதல் வாரத்திலிருந்து முதல் கட்டத் தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் Patty Hajdu தெரிவித்துள்ளார்.
இதில் தொழிற்பயிற்சியை முறையாக முடிக்காவிட்டாலும், போதிய நடைமுறை பணி அனுபவத்துடன் Red Seal சான்றிதழ் பெற்றுள்ள பணியாளர்களும் எதிர்வரும் July மாதம் முதல் இந்த ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு துணைபுரியும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,00,000 புதிய திறன்சார் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக Liberal அரசு அறிவித்துள்ளது.
